ரூ.2.70 கோடியில் வெள்ளாடு இன ஆராய்ச்சி மையம்
சங்கரன்கோவில் அருகே ரூ.2.70 கோடியில் வெள்ளாடு இன ஆராய்ச்சி மையம் திறப்பு விழா நடந்தது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன கோவிலான்குளம் கிராமத்தில் வெள்ளாடு இன ஆராய்ச்சி மையம் ரூ.2.70 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டது. அதன் திறப்பு விழா நடைபெற்றது.
தென்காசி கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ., தனுஷ்குமார் எம்.பி., சதன் திருமலைக்குமார் எம்.எல்.ஏ., தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக பதிவாளர் டென்சிங் ஞானராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு, ஆராய்ச்சி மையத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து அங்கு கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை ஆய்வு செய்தார்.
இதில் கால்நடை மருத்துவர் துறை மண்டல துணை இயக்குனர் ரோஜார், கால்நடை மருத்துவர் மலர்கொடி, தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆறுமுகசாமி, மாவட்ட பொருளாளர் ஷெரீப், நகர செயலாளர் அந்தோணிசாமி, மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கே.எஸ்.எஸ். மாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.