கன்னிவாடி சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.7,500-க்கு விற்பனை


கன்னிவாடி சந்தையில் 10 கிலோ ஆடு ரூ.7,500-க்கு விற்பனை
x

கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் வரத்து குறைவால் ஆடுகளின் விலை உயர்ந்தது. இதனால் 10 கிேலா ஆடு ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

திருப்பூர்

கன்னிவாடி ஆட்டுச்சந்தையில் வரத்து குறைவால் ஆடுகளின் விலை உயர்ந்தது. இதனால் 10 கிேலா ஆடு ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கன்னிவாடி ஆட்டுச்சந்தை

தமிழகத்தில் நடைபெறும் பெரிய ஆட்டு சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது. அதன்படி நேற்று சந்தை நடந்தது. இந்த சந்தைக்கு கன்னிவாடி, மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் ஆடுகளை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இவற்றை வாங்க சென்னை, மதுரை, கோவை, திருச்சி, பொள்ளாச்சி, உடுமலை பகுதிகளை சேர்ந்த வியாபரிகள் வந்திருந்தனர்.

சந்தையில் ஆடுகளின் விலை அதன் எடையை பொறுத்தே நிர்ணயிக்கப்படுகிறது. அதன்படி கடந்த வாரத்தில் ரூ.6500-க்கு விற்பனை செய்யப்பட்ட 10 கிலோ ஆடு இந்த வாரம் ரூ.7500-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆடுகளின் வரத்து குறைந்ததால் விலை உயர்ந்து இருந்தது. விலை உயர்வு

விலை உயர்வு

இது குறித்து ஆடு வளர்க்கும் விவசாயி ஒருவர் கூறியதாவது:-

மூலனூர் பகுதியில் ஆடுகளுக்கு போதுமான தீவனம் கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் ஆடுகளை விற்க முன்வருவதில்லை.

எனவே கன்னிவாடி ஆட்டு சந்தைக்கு கடந்த மூன்று வாரங்களாக ஆடுகள் வரத்து குறைந்துள்ளது. இதனால் விலை உயர்வு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story