ஆடு, நாட்டு கோழி விலை வீழ்ச்சி


ஆடு, நாட்டு கோழி விலை வீழ்ச்சி
x
தினத்தந்தி 8 Oct 2023 5:30 AM IST (Updated: 8 Oct 2023 5:30 AM IST)
t-max-icont-min-icon

கோபால்பட்டி சந்தையில் ஆடு, நாட்டு கோழி விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

திண்டுக்கல்

திண்டுக்கல் மாவட்டம் கோபால்பட்டியில் சனிக்கிழமை தோறும் ஆடு, நாட்டுகோழி, சேவல் சந்தை நடைபெறுவது வழக்கம். இந்த சந்தைக்கு கணவாய்பட்டி, வேம்பார்பட்டி, அஞ்சுக்குளிப்பட்டி, மணியக்காரன்பட்டி, கன்னியாபுரம், ஜோத்தாம்பட்டி, பூவகிழவன்பட்டி, வடுகபட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் ஆடு, கோழிகளை விற்பனைக்காக கொண்டு வருவது வழக்கம். அதேபோல் திண்டுக்கல், மதுரை, பழனி, பொள்ளாச்சி, திருப்பத்தூர், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து ஆடு, கோழி, சேவல்களை வாங்கிச்செல்வார்கள்.

தற்போது புரட்டாசி மாதம் என்பதால் சந்தைக்கு வியாபாரிகள் வருகை குறைந்தது. இதனால் நேற்று நடந்த சந்தைக்கும் ஆடு, நாட்டுகோழி வரத்து குறைவாக இருந்தது. அதேபோல் அவற்றின் விலையும் வீழ்ச்சியடைந்தது. கடந்த மாதம் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆடு ரூ.9 ஆயிரம் வரை விற்பனைது. ஆனால் நேற்று ரூ.6 ஆயிரம் வரை தான் ஒரு ஆடு விலை போனது. இதேபோல் கோழி, சேவல் விலையும் குறைந்தது.


Next Story