மின்சாரம் தாக்கி ஆடு சாவு
திட்டச்சேரியில் மின்சாரம் தாக்கி ஆடு சாவு
நாகப்பட்டினம்
திட்டச்சேரி:
திட்டச்சேரி பச்சாந்தோப்பு மெயின் ரோடு பகுதியில் உள்ள கிளி வாய்க்காலில் கொள்ளிடம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் குழாயின் உபரி நீர் வெளியேறும் குழாய் உள்ளது. இந்த குழாய் அருகில் திட்டச்சேரி பேரூராட்சி மூலம் ஆற்றங்கரை தெருவிற்கு குடிநீர் வினியோகம் செய்யும் குடிநீர் குழாயின் மோட்டார் அறை உள்ளது. இந்த மோட்டார் அறைக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்டுள்ள இரும்பாலான பைப்பில் அருகிலிருந்த மின் கம்பிகள் உரசி வாய்க்காலில் இருந்த தண்ணீரில் மின்சாரம் பாய்ந்துள்ளது. இதை அறியாமல் வாய்க்காலில் இறங்கி தண்ணீர் குடித்த ஆட்டின் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் அந்த ஆடு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தது. இது குறித்து தகவல் அறிந்த மின் ஊழியர்கள் மின்சாரத்தை துண்டித்து மின்கம்பிகளை சீரமைத்தனர்.
Related Tags :
Next Story