கன்னிவாடி சந்தையில் ரூ.3¾கோடிக்கு ஆடுகள் விற்பனை
மூலனூர் அருகே உள்ள கன்னிவாடியில் நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில் ரூ.3 கோடியே 70 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது.
மூலனூர் அருகே உள்ள கன்னிவாடியில் நேற்று நடந்த ஆட்டுச்சந்தையில் ரூ.3 கோடியே 70 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது.
கன்னிவாடி ஆட்டுச்சந்தை
திருப்பூர் மாவட்டம் மூலனூர் அருகே உள்ள கன்னிவாடியில் தமிழகத்தில் நடைபெறும் முக்கிய ஆட்டுச் சந்தைகளில் ஒன்று கன்னிவாடி ஆட்டுச்சந்தை. இந்த சந்தை வாரந்தோறும் வெள்ளிக்கிழமையன்று நடைபெற்று வருகிறது.
இங்கு கோவை, பொள்ளாச்சி, உடுமலை, மதுரை, திருச்சி, சென்னை போன்ற தமிழகத்தின் பெரு நகரங்கள் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளி மாநிலங்களை சேர்ந்த வியாபாரிகள், விவசாயிகள் கன்னிவாடி ஆட்டு சந்தையில் வந்து ஆடுகளை கறிக்காகவும், வளர்க்கவும் வாங்கி செல்கின்றனர்.
அதேபோல் கன்னிவாடி மற்றும் மூலனூர், வெள்ளகோவில், பரமத்தி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களது ஆடுகளை விற்பனைக்காக இங்கு கொண்டு வருகின்றனர். கடந்த 2 வாரங்களாகவே அதிகாலை நேரத்தில் கடும் அதிக பனி காரணமாக வியாபாரம் சிறிது குறைந்து வந்தது.
ரூ.3¾ கோடிக்கு விற்பனை
ஆனால் நேற்று அதிகாலை நேரத்தில் கடும் குளிர் வாட்டி வதைத்ததால் விவசாயிகளின் வரத்து குறைவாகவே இருந்து வந்தது. இதனால் ஆடுகளின் விலை சற்று அதிகமாகவே இருந்தது.
இந்த வாரத்தில் ஆடு ஒரு கிலோ ஆடு ரூ.750-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 10 கிலோ எடை கொண்ட ஒரு ஆட்டின் விலை ரூ.7ஆயிரத்து 500 ஆகும். இந்த வாரம் சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தன. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.3 கோடியே 70 லட்சம் ஆகும்.