புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை


புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனை
x

புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது.

ஈரோடு

புஞ்சைபுளியம்பட்டி

புஞ்சைபுளியம்பட்டி வாரச்சந்தையில் ரூ.50 லட்சத்துக்கு ஆடுகள் விற்பனையானது.

ஆடுகள்

ஈரோடு மாவட்டம் புஞ்சைபுளியம்பட்டியில் வாரம்தோறும் வியாழக்கிழமை சந்தை நடைபெறும். இங்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் கால்நடைகளை விற்பனைக்காக கொண்டு வருவார்கள்.

நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) பக்ரீத் பண்டிகை என்பதனால் நேற்று நடந்த வாரச்சந்தையில் ஆடுகள் விற்பனை அதிகரித்து உள்ளது.

ரூ.50 லட்சத்துக்கு விற்பனை

ஈரோடு, திருப்பூர், கோவை, நீலகிரி என பல பகுதிகளில் இருந்தும் 300-க்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. செம்மறி ஆடுகள் ரூ.10ஆயிரம் முதல் ரூ.18 ஆயிரம் வரை என மொத்தம் ரூ.50 லட்சத்துக்கு மேல் விற்பனையானது.

வழக்கமாக வாரம்தோறும் ரூ.10 முதல் ரூ.15 லட்சம் வரை மதிப்பிலான ஆடுகள் விற்பனையாகும். இந்த வாரம் ரூ.50 லட்சத்துக்கு மேல் ஆடுகள் விற்பனையானதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.



Related Tags :
Next Story