அரசு பள்ளியில் கோலப்போட்டி
நாமக்கல்
ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி நாமக்கல் வட்டார வள மையத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் 60 மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் 1,115 கற்போர் பயனடைந்து வருகின்றனர். நேற்று காவேட்டிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் பயன்பெற்று வரும் 20 பேரை ஊக்குவிக்கும் வகையில் கோலப்போட்டி நடத்தப்பட்டது. இந்த போட்டியில் முதலிடம் பிடித்த முனியம்மாள், 2-ம் இடம் பிடித்த காசியம்மாள் ஆகியோருக்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் சசிராணி, பள்ளி தலைமை ஆசிரியர் கயல்விழி மற்றும் ஆசிரியர்கள் பரிசுகளை வழங்கினர். கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. அனைவரும் எண்ணறிவும், எழுத்தறிவும் பெற்று பயனடைய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
Related Tags :
Next Story