சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக அரசு தகவல்


சென்னையில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு: தமிழக அரசு தகவல்
x

கோப்புப்படம்

தினத்தந்தி 27 Nov 2023 5:22 PM GMT (Updated: 28 Nov 2023 7:02 AM GMT)

உலக முதலீட்டாளர்கள் மாநாடு ஜனவரி 7-ந்தேதி தொடங்கி 2 நாட்கள் நடக்க உள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாடு அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன துறையின் வளர்ச்சிக்கு அரசு சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது. தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்காக உள்நாட்டு மற்றும் வெளிநாடு முதலீட்டை ஈர்க்கும் வண்ணம் தமிழ்நாடு அரசு வருகிற ஐனவரி 7-ந்தேதி மற்றும் 8-ந்தேதி ஆகிய தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை சென்னையில் நடத்த உள்ளது.

அனைவரையும் உள்ளடக்கிய நிலையான மற்றும் நீடித்த வளர்ச்சியினை நோக்கமாக கொண்டு 1 பில்லியன் டாலர் பொருளாதாரத்தை அடைவதில் இம்மாநாடு முக்கிய பங்கு வகிக்கும்.

முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு முன்னோடியாக சென்னை மாவட்டத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன தொழில்களில், மூதலீடுகளை ஈர்க்கும் வகையில் மாவட்ட அளவிலான தொழில் முதலீட்டாளர்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் கருத்தரங்கு கூட்டம் நாளை மறுநாள் (புதன்கிழமை) அன்று ஹேட்டல் லீ ராயல் மெரிடியனில் நடக்கிறது.

தமிழ்நாட்டில் நிலவும் தொழில் துறைக்கு உகந்த சூழல் அமைப்பு, மேம்பட்ட உள்கட்டமைப்பு திறமை வாய்ந்த பணியாளர்கள் மற்றும் மேம்பாட்டிற்கு வழங்கப்படும் முக்கியத்துவம், வணிக ரீதியான வசதி வாய்ப்புகள் ஆகியவைகளை தொழில் துறையில் மூதலீடு செய்தவர்களுக்கு சிறந்த வாய்ப்புகளை வழங்குகிறது.

பாதுகாப்பு துறை விண்வெளி தகவல் தொழில் நுட்பம் செயற்கை நுண்ணறிவு, ஆட்டோமொபைல், மின்சார வாகனங்கள், ஐவுளி, தரவு பகுப்பாய்வு, மருத்துவ உபகரணங்கள், மின்னணு சாதனங்கள், குறிப்பாக, விண்வெளி மற்றும் பாதுகாப்புத்துறையில் முதலீடுகள் மற்றும் வளர்ச்சிக்கான கவர்ச்சிகரமான இடமாக சென்னை மாவட்டம் உள்ளதால் தொழில் முதலீடுகள் அதிகமாக பெறப்பட்டு வருகிறது.

சென்னை மாவட்டத்திற்கு முதலீடு ரூ.4 ஆயிரத்து 368 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு ரூ.5 ஆயிரத்து 566 கோடி அளவிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் பெறப்பட்டுள்ளது. வளர்ந்து வரும் உள்நாட்டு தேவை, சாதகமான வணிகச்சூழல் வலுவான ஆராய்ச்சித்திறன்கள், மற்றும் திறமையான பணியாளர்கள் ஆகியவற்றின் மூலம் இத்துறையின் வளர்ச்சி மற்றும் சென்னை மாவட்ட முதலீட்டாளர்கள் வளர்ச்சியில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கும் நிலையில் உள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story