சுங்கச்சாவடியில் கண்ணாடி உடைப்பு
சுங்கச்சாவடியில் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் திருமாந்துறை சுங்கச்சாவடியில் பணிபுரிந்த ஊழியர்களில் 28 பேரை அதன் தனியார் ஒப்பந்த நிறுவனம் நீக்கியது. இதனை கண்டித்து சுங்கச்சாவடி ஊழியர்கள் 31-வது நாளாக தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த சுங்கச்சாவடியில் கட்டண வசூலில் ஈடுபடுவதற்காக, ஒப்பந்த நிறுவனத்தின் மற்றொரு சுங்கச்சாவடியில் இருந்து ஊழியர்கள் வரவழைக்கப்பட்டனர். வெளியூரில் இருந்து வந்தவர்கள் சுங்கச்சாவடியில் பணியாற்றக்கூடாது என்று சிலர் கடந்த 29-ந்தேதி இரவு அவர்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, சுங்கச்சாவடி கட்டண வசூல் மையத்தின் கண்ணாடியை அடித்து நொறுக்கினர். அதில் உள்ளே இருந்த ஊழியர் ஒருவருக்கு காயம் ஏற்பட்டது. இது தொடர்பாக சுங்கச்சாவடி தனியார் ஒப்பந்த நிறுவனம் சார்பில் மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியிருந்த காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.