ஏ.டி.எம். மைய கண்ணாடி உடைப்பு


ஏ.டி.எம். மைய கண்ணாடி உடைப்பு
x

நாமக்கல்லில் ஏ.டி.எம். மைய கண்ணாடி உடைந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்

நாமக்கல் பஸ்நிலையம் அருகே உள்ள நந்தவன தெருவில் தனியார் வங்கிக்கு சொந்தமான ஏ.டி.எம். எந்திரம் உள்ளது. இதை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்களும், பஸ் பயணிகளும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த ஏ.டி.எம். எந்திர மையத்தின் கதவில் உள்ள கண்ணாடி நேற்று அதிகாலை உடைந்து கிடந்தது. இதுகுறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் நாமக்கல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அங்கு விரைந்து சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.

பின்னர் வங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கு வரவழைக்கப்பட்டனர். அவர்கள் ஏ.டி.எம். எந்திரத்தை பரிசோதனை செய்தபோது அதில் இருந்து பணம் எதுவும் கொள்ளை போகவில்லை என்பது தெரியவந்தது. இதனால் போலீசார் நிம்மதி அடைந்தனர். இருப்பினும் ஏ.டி.எம். எந்திர மையத்தின் கண்ணாடி கதவு உடைக்கப்பட்டது எப்படி? எதற்காக? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை முயற்சி நடந்ததா? என்கிற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story