நாளை மறுநாள் காதலனுடன் திருமணம் நடக்க இருந்த நிலையில் புதுப்பெண் திடீர் மாயம் நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு


நாளை மறுநாள் காதலனுடன் திருமணம் நடக்க இருந்த நிலையில்  புதுப்பெண் திடீர் மாயம்  நெல்லிக்குப்பத்தில் பரபரப்பு
x

நெல்லிக்குப்பத்தில் நாளை மறுநாள் காதலனுடன் திருமணம் நடக்க இருந்த நிலையில், புதுப்பெண் திடீரென மாயமாகி விட்டார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர்


நெல்லிக்குப்பம்,



நெல்லிக்குப்பத்தை சேர்ந்தவர் 18 வயது இளம் பெண். இவர் கடலூரில் உள்ள ஒரு கல்லூரியில் பி.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் மாணவிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து இருவீட்டாரும் பேசி திருமணத்துக்கு ஏற்பாடு செய்தனர். ஆனால் மாணவிக்கு 18 வயது பூர்த்தி ஆகாததால் ஜூன் மாதத்தில் திருமணம் செய்து வைக்கலாம் என்று முடிவு எடுத்தனர். அதன்படி மாணவிக்கு தற்போது 18-வயது முடிவடைவதால், நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருமணம் செய்து வைக்க முடிவு செய்து, அதற்கான ஏற்பாட்டில் இருவீ்ட்டாரும் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மணமகனின் வீட்டில் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

புதுப்பெண் மாயம்

இதற்கிடையே புதுப்பெண், வீட்டில் இருந்து திடீரென மாயமாகி விட்டார். உறவினர்கள் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் நெல்லிக்குப்பம் போலீசார் வழக்குப் பதிவு செய்து கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது.


Next Story