மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி


மின்சாரம் தாக்கி இளம்பெண் பலி
x

திருக்குறுங்குடி அருகே மின்சாரம் தாக்கி இளம்பெண் பலியானார்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

திருக்குறுங்குடி அருகே உள்ள தளவாய்புரம் வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் துரைச்சாமி மகள் கார்த்திகா (வயது 23). இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த இளங்காமணி என்பவருக்கும் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின் இருவரும் துரைச்சாமியின் வீட்டிலேயே வசித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் கார்த்திகா குளிப்பதற்காக வாளியில் தண்ணீர் நிரப்பி அதில் கையடக்க வாட்டர் ஹீட்டரை போட்டுள்ளார். சிறிது நேரத்திற்கு பின் மின் இணைப்பை துண்டிக்காமல் வாட்டர் ஹீட்டரை கையில் எடுத்ததாக கூறப்படுகிறது. அப்போது எதிர்பாராதவிதமாக அவரை மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் மயங்கினார். அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஏர்வாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து திருக்குறுங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Related Tags :
Next Story