12 அடி உயரம் எழுந்த ராட்சத அலைகள்
நாகப்பட்டினம்
நாகூர் அருகே பட்டினச்சேரியில் நேற்று கடல் சீற்றமாக காணப்பட்டது. 12 அடி உயரத்திற்கு மேல் ராட்சத அலைகள் சீறிப்பாய்ந்தது. இதன் காரணமாக பட்டினச்சேரி கிராமத்திற்குள் புகுந்து வீடுகளை சூழ்ந்தது.கடல் சீற்றம் காரணமாக கடற்கரையில் இருந்த 10 தென்னை மரங்கள் சாய்ந்து விழுந்தன. ஒரு மின்கம்பம் சரிந்து விழுந்தது.
அக்கரைப்பேட்டை
அதேபோல கீச்சாங்குப்பம், அக்கரைப்பேட்டை கடற்கரையில் தடுப்புச் சுவரை தாண்டி கடல் அலை எழுந்தது. கடல் சீற்றம் காரணமாக பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தவிர்த்து வந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து நாகை தாசில்தார் ராஜசேகரன் தலைமையிலான வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தனர். இதையடுத்து கடலோரங்களில் வசிக்கும் மக்களை நாகூர் புயல் பாதுகாப்பு மையத்திற்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story