எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
மயிலாடுதுறையில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் 30-ந்தேதி நடக்கிறது
மயிலாடுதுறை
மயிலாடுதுறை:
மயிலாடுதுறை கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் எரிவாயு நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்வருகிற 30-ந்தேதி (திங்கட்கிழமை) மாலை 4.30 மணியளவில் நடைபெறுகிறது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் தலைமை தாங்குகிறார்.கூட்டத்தில் எரிவாயு சிலிண்டர் பதிவு செய்து வழங்குவதில் காணப்படும் குறைபாடுகள், நுகர்வோர் பதிவு செய்த புகார்களின் மீது நடவடிக்கை எடுப்பதில் எரிவாயு முகவர்களின் செயல்பாடுகள், எரிவாயு சிலிண்டர் நுகர்வோருக்கு சீரான முறையில் வழங்குதல் தொடர்பான ஆலோசனைகளையும் அனைத்து எரிவாயு நுகர்வோர் அமைப்பினர் நேரில் தெரிவித்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story