தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம்
கள்ளக்குறிச்சியில் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் கருடசேவை உற்சவம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சி
கள்ளக்குறிச்சியில் பிரசித்தி பெற்ற ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் தேர் திருவிழா கடந்த மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தில்லை கோவிந்தராஜ பெருமாள் ஹம்ச வாகனம், சிம்ம வாகனம், ஹனுமந்த வாகனம், சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலா வந்தார். பின்னர் நேற்று முன்தினம் கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதையடுத்து நேற்று இரவு யானை வாகனத்தில் சாமி வீதிஉலா நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) திருக்கல்யாண உற்சவம் மற்றும் புஷ்ப பல்லக்கு உற்சவமும், நாளை (வியாழக்கிழமை) குதிரை வாகனத்தில் வீதி உலா உற்சவம் நடக்கிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் அப்பகுதி மக்கள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story