விஜயராகவ பெருமாள் கோவிலில் கருட சேவை
திருத்தணி முருகன் கோவிலின் உப கோவிலான, விஜயராகவ பெருமாள் கோவிலில் ஆண்டு தோறும் வைகாசி விசாகத் தினத்தன்று வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிப்பது வழக்கம்.
திருவள்ளூர்
கொரோனா பரவல் காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக இவ்விழா நடைப்பெறவில்லை. இந்நிலையில் நேற்று வைகாசி விசாக தினத்தை முன்னிட்டு வரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீப ஆராதனைகள் நடைப்பெற்றது.
பின்னர் அலங்கரிக்கப்பட்ட கருட வாகனத்தில் வரதராஜப் பெருமாள் எழுந்தருளினார். தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திருத்தணி எம்.எல்.ஏ. சந்திரன், மாவட்ட பொறுப்பாளர் பூபதி ஆகியோர் கலந்துக்கொண்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்கள்.
இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை திருத்தணி நகர மளிகைகடை வியாபாரிகள் சங்கம் மற்றும் திருத்தணி வரதராஜ பெருமாள் கருட சேவை குழுவினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story