ஓசூர் பகுதியில், தக்காளி திருட்டை தடுக்கதோட்டத்தில் வேலி அமைத்து பாதுகாக்கும் விவசாயிகள்


ஓசூர் பகுதியில், தக்காளி திருட்டை தடுக்கதோட்டத்தில் வேலி அமைத்து பாதுகாக்கும் விவசாயிகள்
x
தினத்தந்தி 31 July 2023 12:30 AM IST (Updated: 31 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
கிருஷ்ணகிரி

ஓசூர்:

கடந்த ஒரு மாதகாலமாக தக்காளி கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரை விற்கப்பட்டு வருகிறது. நாளுக்கு நாள் தக்காளி விலை அதிகரித்து வருகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் தக்காளி பயிரிட்டுள்ள சில விவசாயிகளுக்கு கடந்த ஒரு மாத காலமாக அதிக வருமானம் கிடைத்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் விலை அதிகரிப்பால் ஓசூர் பகுதியில் உள்ள தோட்டங்களில் தக்காளி திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இதனால் ஓசூர் பகுதியில் விவசாயிகள் இரவு பகலாக தொடர்ந்து தோட்டத்தை கண்காணித்து வருகின்றனர். மேலும் விவசாயிகள் தக்காளி தோட்டத்திற்கு முள்வேலி அமைத்து பாதுகாத்து வருகின்றனர். அந்த வகையில் ஓசூர் அருகே தாசிரிப்பள்ளி பகுதியை சேர்ந்த ராமரெட்டி என்ற விவசாயி சுமார் 2 ஏக்கரில் தக்காளி சாகுபடி செய்துள்ளார். தற்போது தக்காளி திருட்டு நடைபெறுவதால் அவர் தக்காளி விற்பனை செய்து கிடைத்த லாபத்தில் ரூ.1½ லட்சத்தில் தோட்டத்தை சுற்றிலும் கருங்கல் தூண் நட்டு, இரும்பு வேலி அமைத்து தக்காளி தோட்டத்தை பாதுகாத்து வருகிறார்.


Next Story