சதுரகிரி கோவிலில் குப்பைகள் அகற்றம்
சதுரகிரி கோவிலில் குப்பைகள் அகற்றப்பட்டது.
மதுரை
பேரையூர்,
பேரையூர் தாலுகாவில் உள்ள சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் கடந்த 12-ந் தேதி முதல் 17-ந் தேதி வரை ஆடி அமாவாசை திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை மீது ஏறி சாமி தரிசனம் செய்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்ட நிலையில் வனப்பகுதியில் உள்ள நடைபாதையில் ஏராளமான பிளாஸ்டிக் பொருட்கள், பேப்பர்கள், குப்பைகள் கிடந்தன. அந்த குப்பைகளை வனவிலங்குகள் சாப்பிட்டால் அவற்றுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதி சாப்டூர் வனச்சரகர் செல்லமணி தலைமையில், வனத்துறை ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள், மலைப்பாதை பகுதிகளில் இருந்த குப்பைகளை அகற்றினர். மேலும் தொடர்ந்து குப்பைகளை அகற்றும் பணி தொடரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story