கஞ்சா விற்றவர் கைது
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கஞ்சா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்று வட்டார பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரமேஷ் மற்றும் போலீசார் நெமிலி பகுதியில் சோதனை செய்தனர். அப்போது ஒரு வட மாநில வாலிபர் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தார். போலீசாரை கண்டதும் தப்பி ஓட முயன்றபோது போலீசார் அவரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அவர் கஞ்சா பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த ரஞ்சித்நாத் (வயது34) என்பதும், அவர் நெமிலி பகுதியில் வாடகை வீட்டில் தங்கி ஒடிசா மாநிலத்தில் இருந்த இவரது நண்பருடன் சேர்ந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து இங்கு வேலை செய்யும் வடமாநில தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்றதும் தெரியவந்தது. போலீசார் ரஞ்சித்நாத்தை கைது செய்து ஸ்ரீபெரும்புதூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தி காஞ்சீபுரம் கிளை சிறையில் அடைத்தனர். மேலும் ரஞ்சித்நாத் வீட்டில் பதுக்கி வைத்திருந்த 25 கிலோ காஞ்சவை போலீசார் பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்.