கஞ்சா கடத்திய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருச்சியில் கஞ்சா கடத்திய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
திருவெறும்பூர், ஆக.7-
திருச்சிக்கு 8 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் சித்தையன் கோட்டை பகவதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சிவா என்பவரின் மகன் ரமணா (வயது 20) உள்பட 4 பேர் திருவெறும்பூர் போலீசாரால் கடந்த ஜூன் மாதம் கைது செய்யப்பட்டனர். தற்போது திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்களில், ரமணா மீது கஞ்சா விற்பனை செய்தது உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பதும், அவர் வெளியே வந்தால் பொது அமைதிக்கும், பொதுமக்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துவார் என்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதனால், ரமணாவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய திருச்சி மாவட்ட கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜித்குமார் பரிந்துரை செய்தார். அதன்பேரில் ரமணாவை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் பிரதீப்குமார் நேற்று உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து அதற்கான உத்தரவு நகலை திருச்சி மத்திய சிறையில் உள்ள ரமணாவுக்கு போலீசார் நேற்று சார்வு செய்தனர்.