கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

முட்டத்தில் தாய்-மகளை கொன்ற வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

கன்னியாகுமரி

ராஜாக்கமங்கலம்:

முட்டத்தில் தாய்-மகளை கொன்ற வழக்கில் கைதான வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தாய், மகள் கொலை

வெள்ளிச்சந்தை அருகே உள்ள முட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ஆன்றோ சகாயராஜ். இவர் வெளிநாட்டில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி பவுலின் மேரி (வயது 48). பவுலின்மேரியின் தாயார் தெரசம்மாள். வீட்டில் தையல் வகுப்புகளை பவுலின்மேரி நடத்தி வந்தார். இந்தநிலையில் இவர்கள் இருவரும் கடந்த ஜூன் மாதம் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டனர்.

மேலும் அவர்கள் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து வெள்ளிச்சந்தை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த கொலை வழக்கு தொடர்பாக கடியப்பட்டினம் பாத்திமா தெருவை சேர்ந்த அமலசுமன் (35) என்பவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி மாவட்ட சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம்

இதற்கிடையே அமலசுமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கலெக்டர் அரவிந்துக்கு பரிந்துரை செய்தார். அதனை ஏற்று அமல சுமனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய அவர் உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து அமலசுமனை வெள்ளிச்சந்தை போலீசார் கைது செய்து நேற்று பாளையங்கோட்டை சிறையில் அடைத்தனர். குமரி மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரை குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 50-ஆக உயர்ந்துள்ளது.


Next Story