கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

தொழிலாளி கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தஞ்சாவூர்

தொழிலாளி கொலை வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

தொழிலாளி கொலை

தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே மெலட்டூர் பகுதி வெண்ணுக்குடியை சேர்ந்தவர் தனபால். இவருடைய மகன் கோபி என்கிற இளங்கோ (வயது31). தொழிலாளியான இவர் அம்மாப்பேட்டை மேட்டுத்தெருவில் உள்ள தனது உறவினர் வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இளங்கோ அம்மாப்பேட்டை முருகன் கோவில் அருகே வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அம்மாப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த கொலை வழக்கு தொடர்பாக திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகா மணக்கால் இந்திராநகர் மேலத்தெருவை சேர்ந்தவர் கருணாநிதி மகன் மதன் என்கிற மதிநேசன் (25), தஞ்சை மாவட்டம் பாபநாசம் தாலுகா அம்மாப்பேட்டை மேட்டுத்தெருவை சேர்ந்த தனபால் மகன் பாபு என்கிற ஆனந்தபாபு (30) உள்ளிட்ட சிலரை போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.

குண்டர் சட்டம் பாய்ந்தது

இந்தநிலையில் மதன், ஆனந்தபாபு ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் பரிந்துரையின்பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாற்சோழன் வழக்கு ஆவணங்களை கலெக்டரிடம் தாக்கல் செய்தார். இந்த ஆவணங்களை கலெக்டர் தீபக் ஜேக்கப் பரிசீலனை செய்து மதன், ஆனந்தபாபு ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அந்த 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான ஆவணங்களை திருச்சி சிறைத்துறை அதிகாரிகளிடம் அம்மாப்பேட்டை போலீசார் சமர்ப்பித்தனர்.


Next Story