கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நகைக்கடை அதிபரை தாக்கி ரூ.1½ கோடி கொள்ளையடித்த வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
நகைக்கடை அதிபரை தாக்கி ரூ.1½ கோடி கொள்ளையடித்த வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
ரூ.1½ கோடி கொள்ளை
நெல்லை டவுன் பகுதியைச் சேர்ந்தவர் சுசாந்த்குமார். நகைக்கடை அதிபரான இவர் கடந்த 30-5-23 அன்று தனது காரில் ரூ.1½ கோடி பணத்துடன் நகை வாங்குவதற்காக நாகர்கோவில் நோக்கி புறப்பட்டார்.
நெல்லை அருகே மூன்றடைப்பு பகுதியில் வந்த போது, பின் தொடர்ந்து காரில் வந்த மர்மநபர்கள் சுசாந்த்குமாரை தாக்கி, ரூ.1½ கோடியை கொள்ளையடித்து சென்றனர். இந்த சம்பவம் தொடர்பாக மூன்றடைப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து 5 பேரை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
3 பேர் மீது குண்டர் சட்டம்
இந்த நிலையில் இந்த வழக்கில் கைதான ேகரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த எட்வின்தாமஸ் (வயது 26), கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த முகம்மது ஜூனைன் (39), திருச்சூர் சாலக்குடியைச் சேர்ந்த பெபின் சஜீ (26) ஆகியோரால் பொது அமைதிக்கு பங்கம் ஏற்படும் என்பதால் 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன், இன்ஸ்பெக்டர் செல்வி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர்.
இதை கலெக்டர் கார்த்திகேயன் ஏற்று எட்வின் தாமஸ், முகமது ஜூனைன், பெபின் சஜீ ஆகிய 3 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதற்கான உத்தரவை பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் இன்ஸ்பெக்டர் செல்வி நேற்று வழங்கினார்.