8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

நெல்லையில் 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

திருநெல்வேலி

சீவலப்பேரி யாதவர் தெருவை சேர்ந்த மாயாண்டி (வயது 38) என்பவர் கொலை வழக்கில் போலீசார் 16 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த கொலை வழக்கில் கைதான சீவலப்பேரியை சேர்ந்த மாசானமுத்து (20), வல்லநாட்டை சேர்ந்த தம்பான் (20), இசக்கிபாண்டி (20), மானூர் பல்லிக்கோட்டையை சேர்ந்த மாடசாமி (27), சுபாஷ் (24), மேலதாழையூத்தை சேர்ந்த வெயில்குமார் என்ற கொக்கிகுமார் (27), சீவலப்பேரியை சேர்ந்த முத்துமாரி என்ற குஜராத் (20) உள்பட 8 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க வேண்டும் என்று மாவட்ட போலீஸ் சரவணன், தாழையூத்து துணை போலீஸ் ஆனந்தராஜ், சீவலப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். இதை கலெக்டர் விஷ்ணு ஏற்று 8 பேரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டதற்கான உத்தரவை இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி பாளையங்கோட்டை சிறை அதிகாரிகளிடம் நேற்று வழங்கினார்.


Next Story