3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
வக்கீல் கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
தூத்துக்குடியில் வக்கீல் கொலையில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
வக்கீல் கொலை
தூத்துக்குடி சோரீஸ்புரத்தை சேர்ந்தவர் வக்கீல் முத்துக்குமார் (வயது 48). இவர் தூத்துக்குடி கோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார்.
இவர் கடந்த மாதம் 22-ந் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து தூத்துக்குடி சிப்காட் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்கில் ஆறுமுகநேரி சீனந்தோப்புவை சேர்ந்த சிங்கராஜா மகன் வேல்முருகன் (25), தென்காசி அருகே உள்ள கீழகடையத்தை சேர்ந்த காமராஜ் மகன் ராஜரத்தினம் (25), திருவள்ளூர் மாவட்டம் பெரும்பேட்டையை சேர்ந்த ஜெயக்குமார் மகன் இலங்கேசுவரன் (30) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
குண்டர் சட்டத்தில் கைது
அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் கலெக்டர் செந்தில் ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வேல்முருகன், ராஜரத்தினம், இலங்கேசுவரன் ஆகிய 3 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இதனையடுத்து 3 பேரும் குண்டர் தடுப்பு சிறையில் அடைக்கப்பட்டனர்.