பா.ம.க. நிர்வாகி கொலை வழக்கில் கைதான3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


பா.ம.க. நிர்வாகி கொலை வழக்கில் கைதான3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
தினத்தந்தி 23 Dec 2022 12:15 AM IST (Updated: 23 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பா.ம.க. நிர்வாகி கொலை வழக்கில் கைதான 3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

விழுப்புரம்


விழுப்புரம் அருகே கப்பியாம்புலியூரை சேர்ந்தவர்கள் ராமு(வயது 42), லட்சுமிநாராயணன்(41), ராகவன்(32). இவர்கள் மீது பொது சொத்துக்கு சேதம் விளைவித்தல், தகராறு வழக்கு உள்ளிட்ட வழக்குகள் உள்ளன. கடந்த 24.11.2022 அன்று மண்டபம் பெட்ரோல் பங்க் அருகே கப்பியாம்புலியூரை சேர்ந்த பா.ம.க. நிர்வாகி ஆதித்யன் கொலை செய்யப்பட்ட வழக்கில் ராமு உள்ளிட்ட 3 பேரையும் விக்கிரவாண்டி போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இவர்களின் தொடர் குற்ற செயல்களை தடுக்கும் வகையில் 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாதா பரிந்துரை செய்தார். இதை ஏற்று கலெக்டர் மோகன் உத்தரவின் பேரில் அதன்பேரில் ராமு, லட்சுமிநாராயணன், ராகவன் ஆகிய 3 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்கான உத்தரவு நகல், கடலூர் சிறையில் இருக்கும் அவர்கள் 3 பேருக்கும் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கப்பட்டது.


Next Story