3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருநெல்வேலி

களக்காடு அருகே சிங்கிகுளத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 43). இவர் தேர்தல் முன்விரோதம் காரணமாக வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் ராமச்சந்திரன் (43), ஐகோர்ட்டு ராஜா (31), இசக்கி பாண்டி (28), இசக்கிமுத்து (22), சொக்கலிங்கம் (24) ஆகிய 5 பேர் கடந்த மாதம் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் இவ்வழக்கில் கைதான சிங்கிகுளம் மேலத்தெருவை சேர்ந்த வானுமாமலை என்ற சுரேஷ் (39) என்பவரையும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார் இந்த உத்தரவு நகலை களக்காடு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.

சுத்தமல்லியில் கடனாக வாங்கிய பணத்தை திருப்பி தராததால் ஏற்பட்ட தகராறு காரணமாக மணிகண்டன் (25), அவருடைய தம்பி சபரீஸ்வரன் (14) ஆகிய இருவரையும் கொலை செய்த வழக்கில், சுத்தமல்லி பாரதியார்நகர் ராஜீவ்காந்திநகரைச் சேர்ந்த சதீஷ்குமார் (23), பார்த்திபன் (22) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கைதான 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரையின்பேரில், கலெக்டர் விஷ்ணு உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை போலீசார் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தனர்.


Next Story