2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

கஞ்சா வழக்கில் கைதான 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
திண்டுக்கல்
ஆத்தூர் தாலுகா நெல்லூரை சேர்ந்தவர்கள் அக்னிஹாசன் (வயது 51), பாண்டித்துரை (32). இவர்கள் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனை செய்த வழக்கில், திண்டுக்கல் தாலுகா போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் இருந்து 90 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் இவர்கள் 2 பேரும், திண்டுக்கல் மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். இதற்கிடையே 2 பேரையும் குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கு போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரை செய்தார். இதை தொடர்ந்து கலெக்டர் பூங்கொடி உத்தரவின்பேரில், திண்டுக்கல் மாவட்ட சிறையில் இருந்த அக்னிஹாசன், பாண்டித்துரை ஆகியோரை தாலுகா போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story