மேலும் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
கஞ்சா வழக்கில் சிக்கிய மேலும் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பகுதியில் கடந்த வாரம் ஒரு மினி லாரியில் 100 கிலோ கஞ்சாவை விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்து கொண்டுவந்தனர்.
இது தொடர்பாக விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து சிலரை கைது செய்தனர்.
இதில் ராமானுஜம்புதூர், இந்திராநகரை சேர்ந்த தளவாய்மாடன் (வயது 24) என்பவர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்த நிலையில் மறுகால்குறிச்சி, பள்ளிக்கூட தெருவை சேர்ந்த ஆறுமுகம் மகன் செல்லதுரை (25), கோவில்பத்து, சவலைக்காரத்தெருவை சேர்ந்த முத்துராமலிங்கம் மகன் பிரவீன்குமார் என்ற பிரவீன் (23) ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் பரிந்துரை செய்தார் இந்த பரிந்துரையை ஏற்று கலெக்டர் கார்த்திகேயன் இரண்டு பேரையும் குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை விக்கிரமசிங்கபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பெருமாள் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.