2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

சேரன்மாதேவியில் 2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருநெல்வேலி

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சந்தன மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துப்பாண்டியன் என்ற ராசு (வயது 62). இவர் கடந்த ஆகஸ்டு மாதம் 27-ந்தேதி கொலை செய்யப்பட்டார்.‌ இந்த வழக்கில் தெற்கு சங்கன்திரடை சேர்ந்த மகாலிங்கம் மகன் மகாராஜன் (19), லெட்சுமணன் மகன் செல்வம் என்ற பட்டை (22) ஆகிய இருவரையும் சேரன்மகாதேவி போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.இவர்களை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட கலெக்டர் விஷ்ணுவுக்கு பரிந்துரை செய்தார். விஷ்ணு இந்த பரிந்துரையை ஏற்று 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை சேரன்மகாதேவி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபாஷ்ராஜன் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் சமர்ப்பித்தார்.


Next Story