2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது


2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x

2 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

திருநெல்வேலி

நாங்குநேரி பகுதியில் முன்விரோதம் காரணமாக சாமிதுரை (வயது 26) என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஏர்வாடி கோதைச்சேரி பகுதியை சேர்ந்த பரமசிவன் மகன் முருகேசன் (23), திசையன்விளை நடுநந்தன்குளத்தை சேர்ந்த ஆசீர் மகன் விக்டர் (23) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

இவர்கள் 2 பேர் மீதும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் நாங்குநேரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ரஜத் சதுர்வேதி ஆகியோர் கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். கலெக்டர் விஷ்ணு இதனை ஏற்று முருகேசன் மற்றும் விக்டர் ஆகிய இருவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை நாங்குநேரி போலீசார் நேற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் கொடுத்தனர்.


Next Story