விநாயகர் சிலை கரைப்பு


விநாயகர் சிலை கரைப்பு
x

நெல்லையில் விநாயகர் சிலை கரைப்பு

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டையில் சரணம் விநாயகர் சதுர்த்தி விழா கமிட்டி சார்பில் விநாயகர் சிலை நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 2 நாட்கள் வழிபாடு நடத்தி நேற்று மதியம் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. நிகழ்ச்சிக்கு பாரதீய ஜனதா பொருளாதார பிரிவு மாநில துணைத்தலைவர் சரணம் ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு வக்கீல் அருள்ராஜ் முன்னிலை வகித்தார். இந்த விநாயகர் சிலை ஊர்வலம் வண்ணார்பேட்டையில் முக்கிய வீதிகளில் சுற்றி வந்தது. பின்னர் பேராட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள தாமிரபரணி ஆற்றில் ஊர்வலம் முடிவடைந்தது. அங்கு சிலைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, தாமிரபரணி ஆற்றுக்குள் எடுத்து சென்று கரைக்கப்பட்டது. இதில் இந்து முன்னணி மற்றும் பா.ஜனதா கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

இதே போல் ஒருசில பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் மணிமூர்த்தீசுவரம் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்பட்டன.

இதுதவிர இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டுள்ள அனைத்து சிலைகளும் வருகிற 4-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஊர்வலமாக எடுத்துச் சென்று தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படுகிறது.


Next Story