விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு


விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் கரைப்பு
x

தோகைமலை பகுதியில் விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்பட்டது.

கரூர்

விநாயகர் சிலைகள் கரைப்பு

கரூர் மாவட்டம், தோகைமலை நாகனூர், கழுகூர், சின்னையம்பாளையம், வடசேரி, புத்தூர், ஆர்.டி.மலை, ஆர்ச்சம்பட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு அனைத்து சிலைகளும் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏற்றப்பட்டு ஊர்வலமாக முக்கிய வீதிகள் வழியாக கொண்டு சென்று நீர் நிலைகளில் கரைத்தனர்.

இதேபோல் தெலுங்கபட்டி ஊர் பொதுமக்கள் சார்பாக விநாயகர் சிலை நேற்று மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் ஏற்றப்பட்டது. பின்னர் பக்தர்கள் சிலர் காளியம்மன், கருப்பசாமி, பத்திரகாளி உட்பட தெய்வங்கள் வேடமணிந்து விநாயகரை தப்பட்டை முழங்க முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக கொண்டு சென்று குளத்தில் கரைத்தனர்.

முளைப்பாரி ஊர்வலம்

இதேபோல் நேற்று மாலை தோகைமலை அய்யப்பா சேவாசங்கம் சங்கம் சார்பில் வரதராஜா பெருமாள் கோவிலில் வைக்கப்பட்ட விநாயகர் சிலை தேரில் ஏற்றப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக வான வேடிக்கை மற்றும் முளைப்பாரியுடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு குறிஞ்சி நகர் தெப்பகுளத்தில் கரைக்கப்பட்டது. தொடர்ந்து பெண்கள் தாங்கள் எடுத்து வந்த முளைப்பாரிகளை தெப்பக்குளத்தில் விட்டு வழிபாடு செய்தனர்.


Next Story