விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைப்பு
விநாயகர் சிலைகள் ஆற்றில் கரைக்கப்பட்டது.
திருச்சி
தொட்டியம்:
தொட்டியம் அருகே உள்ள கொளக்கொடி, அப்பண்ணநல்லூர் ஆகிய ஊர்களில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இந்து முன்னணி சார்பில் 8 விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து, கடந்த ஒரு வாரமாக வழிபட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து நேற்று அந்த சிலைகள் கொளக்குடி பகுதியில் பல்வேறு வீதிகளில் வாகனத்தில் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, திருஈங்கோய்மலை காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன. இதில் அதிகாரிகள், இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் அதிகாரிகள் உள்பட 567 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
Related Tags :
Next Story