சங்கரன்கோவிலில் விநாயகர் சிலை ஊர்வலம்


சங்கரன்கோவிலில் விநாயகர் சிலை ஊர்வலம்
x
தினத்தந்தி 21 Sept 2023 12:15 AM IST (Updated: 21 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற்றது.

தென்காசி

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் நகர இந்து முன்னணி சார்பில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சங்கரன்கோவில் நகரில் உள்ள கோமதியாபுரம், லட்சுமியாபுரம், புதுமனை தெரு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அமைக்கப்பட்டிருந்த 25 விநாயகர் சிலைகளும், குருக்கள்பட்டி, பனவடலிசத்திரம் ஆகிய இடங்களில் வைக்கப்பட்ட 2 சிலைகளும் சங்கரநாராயண சாமி கோவில் முன்பு கொண்டு வரப்பட்டது.

தொடர்ந்து அங்கிருந்து நேற்று மாலை விநாயகர் சிலை ஊர்வலம் புறப்பட்டது. ஊர்வலத்திற்கு அகில பாரத துறவியர் பேரவை இணை செயலாளர் சுவாமி ராகவானந்தா ஜீ தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இந்து முன்னணி தென்காசி மாவட்ட செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.

இந்த ஊர்வலம் மெயின் ரோடு, ராஜபாளையம், கீதாலயா தியேட்டர் ரோடு, திருவேங்கடம் சாலை, முக்கிய ரதவீதிகள் வழியாக மீண்டும் கோவில் முன்பு சென்றடைந்தது. ஊர்வலத்தில் பா.ஜ.க., இ்ந்து முன்னணி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


Next Story