விநாயகர் சதுர்த்தி விழா
எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
எட்டயபுரம்:
எட்டயபுரம், ஓட்டப்பிடாரம் பகுதிகளில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தி
எட்டயபுரம் விநாயகர் சதுர்த்தி கமிட்டி மற்றும் இந்து முன்னணி சார்பில் எட்டயபுரம் பகுதியில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. பட்டத்து விநாயகர் கோவில் முன்பு உள்ள விநாயகர் சிலைக்கு காலையில் சிறப்பு தீபாராதனை, அலங்காரம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழா கமிட்டியினர், இந்து முன்னணியினர் உள்பட பலர் செய்திருந்தனர்
எட்டயபுரம் நடுவிற்பட்டி தெப்பம் அருகில் உள்ள பால சுந்தர விநாயகர் மும்மூர்த்தி கோவிலில் விநாயகர் சதுர்த்தி விழா நடந்தது. இதையொட்டி காலை 10.30 மணிக்கு மேல்11 மணிக்குள் விநாயகருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பாலசுந்தர விநாயகர் கோவில் பொறுப்பாளர் மீனாட்சி சுந்தரம் செய்திருந்தார்.
ஓட்டப்பிடாரம்
ஓட்டப்பிடாரம் அருகே முறம்பன் கிராமத்தில் இந்து மக்கள் கட்சி சார்பில் விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது. அப்போது விநாயகருக்கு பொங்கல் வைத்து வழிபட்டனர். இதனைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில் இந்து மக்கள் கட்சி வடக்கு மாவட்ட தலைவர் பொன்ராஜேந்திரன், ஒன்றிய தலைவர் மாரிமுத்து, மாவட்ட இளைஞர் அணி தலைவர் அருன்குமார் உள்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.