கந்தசஷ்டி திருவிழா: திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்


கந்தசஷ்டி திருவிழா:  திருச்செந்தூரில் நாளை சூரசம்ஹாரம்
x
தினத்தந்தி 17 Nov 2023 9:27 AM IST (Updated: 17 Nov 2023 10:17 AM IST)
t-max-icont-min-icon

சூரசம்ஹாரத்தையொட்டி, திருச்செந்தூரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

திருச்செந்தூர்,

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான கந்தசஷ்டி திருவிழா கடந்த 13-ந்தேதி அதிகாலை யாக சாலை பூஜையுடன் தொடங்கியது.

கந்தசஷ்டி திருவிழாவையொட்டி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து திருச்செந்தூர் வரும் பக்தர்கள், கோவிலில் தங்கி விரதம் மேற்கொண்டு வருகின்றனர். கோவிலின் வளாகத்தில் மேம்பாட்டுப்பணிகள் நடைபெற்று வருவதால் பக்தர்கள் கோவிலின் வெளிவளாகத்தில் தங்கி விரதம் இருந்து வருகின்றனர்.

விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை மாலை கடற்கரையில் நடைபெற உள்ளது. சூரசம்ஹாரத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருவதால், திருச்செந்தூர் முழுவதும் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது. சூரசம்ஹாரத்தையொட்டி, திருச்செந்தூரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.


Next Story