திருக்கோவிலூர், சங்கராபுரம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது
திருக்கோவிலூர், சங்கராபுரம் பகுதியில் பணம் வைத்து சூதாடிய 7 பேர் கைது செய்யப்பட்டனா்.
திருக்கோவிலூர்,
திருக்கோவிலூர் போலீசார் வேங்கூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை பகுதியில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று, அங்கு சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த வேங்கூர் கிராமத்தை சேர்ந்த சுப்பிரமணி மகன் பாலு (வயது 36), பெரியானூர் குப்புசாமி மகன் மணிகண்டன் (32) ஆகியோரை கைது செய்தனர்.
இதேபோல் மேமாலூர் கிராமம் ஏரிக்கரையில் பணம் வைத்து சூதாடிய மேமாலூர் புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த உத்திர நாதன் மகன் பிரான்சிஸ் ( 25), லூர்துசாமி மகன் ஆலிபல்ஆபிரகாம் (35), உத்திரநாதன் மகன் பெர்லின்(22) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி தலைமையிலான போலீசார் திம்மனந்தல் ஏரிக்கரை பகுதியில் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது அங்கு பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டு இருந்த கிடங்குடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்த பரமசிவம்(25), பெரியசாமி (28), விரியூர் பூவரசன்(30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.