தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பில் நிதி பயன்பாடு நிகழ்ச்சி


தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பில் நிதி பயன்பாடு நிகழ்ச்சி
x

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நிதி பயன்பாடு நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

திருச்சி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு சார்பில் திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கரூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நிதி பயன்பாடு நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதி நடக்கிறது.

நிதி பயன்பாடு நிகழ்ச்சி

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மற்றும் இதர விதிகளின் படி முதலாளிகள், ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்ய மார்ச் மாதத்திற்கான நிதி பயன்பாடு நிகழ்ச்சி வருகிற 27-ந்தேதி (திங்கட்கிழமை) தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு திருச்சி மண்டல அலுவலகத்தின் அதிகார வரம்பிற்குட்பட்ட 12 மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.

இதில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, உள்ளிட்ட மாவட்டங்களில் நிதி பயன்பாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த மாவட்டங்களில் வசிக்கும் மற்றும் திருச்சி மண்டல அலுவலகத்தில் நிலுவையில் உள்ள பி.எப், ஓய்வூதியம் தொடர்பான குறைகளை கொண்ட அனைத்து உறுப்பினர்கள், ஓய்வூதியம் பெறுவோர் மேற்குறிப்பிட்ட தேதி மற்றும் நேரத்தில் அந்தந்த மாவட்டத்தின் கீழ் உள்ள இடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தங்கள் குறைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம்.

12 மாவட்டங்கள்

இதில் திருச்சி மாவட்டத்தில் லால்குடி நெஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை மாவட்டத்தில் விராலிமலை புதிய தாசில்தார் அலுவலகம், அரியலூர் மாவட்டத்தில் செந்துறை பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்க கட்டிடம், பெரம்பலூர் மாவட்டத்தில் ஆலத்தூர் தாலுகா பாடாலூர் பைன் பிட் நிட்டிடம் அண்ட் கோ பொது சேவை மையம், கரூர் மாவட்டத்தில் டேன்செம் மெட்ரிக் பள்ளி, தஞ்சை மாவட்டத்தில் வல்லம் தஞ்சை-திருச்சி நெடுஞ்சாலை பொன்னையா ராமஜெயம் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி, திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி குமாரபுரம் மேலவாசல் அருணாமலை கல்வியியல் கல்லூரி, நாகப்பட்டினம் மாவட்டத்தில் வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் கூட்ட அரங்கம், மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி பி.டி.ஓ. அலுவலகம், விழுப்புரம் மாவட்டத்தில் திண்டிவனம் பெருமாள் கோவில் தெரு சரஸ்வதி பங்கஜம் ஓட்டல் மினி ஹால், கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம் கடலூர் மெயின் ரோடு ஸ்ரீ விருதாம்பிகை ஐ.டி.ஐ., கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் ஆசனூர் சாலை திருக்கோவிலூர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளிட்ட இடங்களில் நடைபெறுகிறது.


Related Tags :
Next Story