அம்மன் கோவில்களில் பவுர்ணமி வழிபாடு


அம்மன் கோவில்களில் பவுர்ணமி வழிபாடு
x

அம்மன் கோவில்களில் பவுர்ணமி வழிபாடு

திருவாரூர்

திருமக்கோட்டையில் ஆடி மாத பவுர்ணமியையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதனை தொடர்ந்து பொன்னியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் சுமங்கலி பெண்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

அதேபோல் குடவாசல் அருகே உள்ள சீதக்கமங்கலம் மூலநாதர் கோவிலில் பவுர்ணமியையொட்டி சுதர்சன மகா யாகம் நடைபெற்றது. இதையொட்டி சாமி, அம்பாளுக்கு பால், பன்னீர், தேன், திரவியம், பஞ்சாமிர்தம், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து கோவில் அர்ச்சகர் சிவய்யா தலைமையில் மகா சுதர்சன யாகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கங்காதரன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Next Story