பத்திரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை


பத்திரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை
x
தினத்தந்தி 3 Aug 2023 12:15 AM IST (Updated: 3 Aug 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

பத்திரகாளியம்மன் கோவிலில் பவுர்ணமி பூஜை நடந்தது.

சிவகங்கை

திருப்புவனம்,

திருப்புவனம் அருகே மடப்புரத்தில் பிரசித்தி பெற்ற அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் விசேஷ பூஜைகளும் மற்ற நாட்களில் அபிஷேகம் மற்றும் தீபாராதனைகள் நடைபெறும். தமிழ், ஆங்கில வருட பிறப்பு, ஆடி மாதம் வரும் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் சிறப்பு பூஜைகள் நடைபெறும். இதே போல் ஒவ்வொரு மாதமும் வரும் பவுர்ணமி அன்று பத்திரகாளியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர், திருமஞ்சன பொடி உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்படும். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்வார்கள்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆடி மாத பவுர்ணமி என்பதால் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. முன்னதாக பத்திரகாளியம்மனுக்கு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் மதுரை, சிவகங்கை, திண்டுக்கல், தேனி உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டிருந்தது.


Next Story