கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலைஅமைக்க வேண்டும்- தி.மு.க. கூட்டத்தில் தீர்மானம்
நெல்லையில் கருணாநிதிக்கு முழுஉருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று மத்திய மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நெல்லையில் கருணாநிதிக்கு முழுஉருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும் என்று மத்திய மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
செயல்வீரர்கள் கூட்டம்
நெல்லை மத்திய மாவட்ட தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நெல்லை சந்திப்பில் நடந்தது. அவைத் தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட பொறுப்பாளர் டி.பி.எம்.மைதீன்கான், முன்னாள் எம்.பி.ஹெலன் டேவிட்சன், வசந்தம் ஜெயக்குமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினார்.
கூட்டத்தில், முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் பிறந்தநாள் விழாவை அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டாட வேண்டும். தி.மு.க. அரசின் 2 ஆண்டு சாதனையை மக்களிடம் கொண்டு செல்ல அனைத்து இடங்களிலும் கூட்டம் நடத்த வேண்டும்.
வெண்கல சிலை
நெல்லை நகரின் மையப் பகுதியில் கருணாநிதிக்கு முழு உருவ வெண்கல சிலை அமைக்க வேண்டும். கட்சி உறுப்பினர் சேர்க்கை பணியை துரிதமாக நடத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்த கூட்டத்தில் அப்துல்வகாப் எம்.எல்.ஏ., மேயர் பி.எம்.சரவணன், துணை மேயர் கே.ஆர்.ராஜூ, முன்னாள் எம்.பி. விஜிலாசத்யானந்த், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மாலைராஜா, ஏ.எல்.எஸ்.லட்சுமணன், தி.மு.க. மாநகர செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் பூக்கடை அண்ணாதுரை, துணை செயலாளர் சுதாமூர்த்தி, முன்னாள் துணை மேயர் முத்துராமலிங்கம், ஒன்றிய செயலாளர் அன்பழகன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் பகுதி செயலாளர் தச்சை சுப்பிரமணியன் நன்றி கூறினார்.