சுதா கொங்கரா முதல் வெற்றி மாறன் வரை.. இளையராஜா வீட்டில் சோகத்துடன் வந்த பிரபலங்கள்


சுதா கொங்கரா முதல் வெற்றி மாறன் வரை.. இளையராஜா வீட்டில் சோகத்துடன் வந்த பிரபலங்கள்
x

பவதாரிணியின் உடலுக்கு திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

சென்னை,

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இலங்கையில் ஆயுர்வேத சிகிச்சை பெற்றுவந்த இளையராஜாவின் மகள் பவதாரிணி, நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து அவரது உடல் விமானம் மூலம் சென்னைக்கு கொண்டுவரப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

பாடகி பவதாரிணி உடலுக்கு இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, நடிகர்கள் கார்த்தி, விஷால், ஆனந்தராஜ், இயக்குனர்கள் வெற்றிமாறன், லிங்குசாமி, சீனுராமசாமி, சுதா கொங்கரா, நடிகை காயத்ரி ரகுராம் ஆகியோர் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினர்.

பவதாரிணி உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக திரை பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வருகை தருவதால், இளையராஜாவின் வீட்டில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இறுதிச்சடங்கிற்காக பவதாரிணியின் உடல் இரவு 10 மணியளவில் சொந்த ஊரான தேனிக்கு கொண்டுசெல்லப்பட உள்ளது.


Next Story