சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்துசாய கழிவுகள் வெளியேற்றுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை


சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்துசாய கழிவுகள் வெளியேற்றுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை
x

சிப்காட்டில் உள்ள தொழிற்சாலைகளில் இருந்து சாய கழிவுகள் வெளியேற்றுவதை முற்றிலுமாக தடுக்க வேண்டும் என்று குறைதீர்ப்பு கூட்டத்தில் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஈரோடு

சென்னிமலை

பெருந்துறை சிப்காட்டில் செயல்படும் தொழிற்சாலைகளை ஆய்வு செய்ய ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா 3 அதிகாரிகளை கொண்ட 3 குழுக்களை நியமித்தார். அந்த குழுக்கள் சிப்காட் பகுதிக்கு நேரடியாக சென்று 3 நாட்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டனர். பின்னர் மேலும் 3 நாட்கள் ஆய்வு செய்ய கலெக்டர் உத்தரவிட்டிருந்தார்.

இந்த நிலையில் நேற்று பெருந்துறை மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் குறை தீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சிப்காட் சாய கழிவால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் மற்றும் பெருந்துறை, சென்னிமலை ஒன்றியத்தில் உள்ள விவசாயிகள், சமூக நல ஆர்வலர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

அப்போது சாய கழிவுகள் முறைகேடாக வெளியேறுவது குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஆவேசமாக பேசினார்கள். சாய தொழிற்சாலைகளில் இருந்து முற்றிலுமாக சாய கழிவுகள் வெளியேறுவதை தடுத்து நிரந்தர தீர்வு காண வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்தனர். இதில் பெருந்துறை எஸ்.ஜெயக்குமார் எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story