கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை திட்டமிட்டபடி த.மா.கா.வினர் போராட்டம் நடத்த முடிவு
கோவில்பட்டியில் வெள்ளிக்கிழமை திட்டமிட்டபடி த.மா.கா.வினர் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.
கோவில்பட்டி(கிழக்கு):
கோவில்பட்டி அரசு அலுவலக வளாகத்தில் பழுதான சாலைகளை செப்பனிடக்கோரி மண் அள்ளி போடும் போராட்டம் நடைபெறும் என த.மா.கா.வினர் அறிவித்திருந்தனர். இதை தொடர்ந்து நேற்று தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் லெனின் தலைமையில் சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை உதவி கோட்ட பொறியாளர் துறைசங்கன், உதவி பொறியாளர் சந்திரசேகர் த.மா.கா. நகரத் தலைவர் ராஜகோபால், வட்டாரத் தலைவர் ஆழ்வார்சாமி கட்சி நிர்வாகிகள் கனி, திருமுருகன், செண்பகராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் கூட்டத்தில், அரசு அனுமதி கிடைத்தவுடன் பழுதடைந்த அரசு அலுவலக சாலைகள் செப்பனிடும் பணி நடைபெறும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதை ஏற்க மறுத்து த.மா.கா.வினர் கூட்டத்தை விட்டுவெளியேறினர். பின்னர் இன்று( வெள்ளிக்கிழமை) திட்டமிட்டபடி போராட்டம் நடைபெறும், என தெரிவித்தனர்.