அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்


அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும்
x

ராணிப்பேட்டை பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளது.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டையில் நுகர்வோர் பாதுகாப்பு குழு கூட்டம் நேற்று செயல் தலைவர் ராமசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக தென்சென்னை நுகர்வோர் அமைப்பின் செயலாளர் இளங்கோவன் கலந்து கொண்டார்.

கூட்டத்தில் ராணிப்பேட்டை பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்படுவதை தவிர்க்க வேண்டும், நியாய விலைக்கடைகளில் எடை குறைவாக பொருட்கள் நுகர்வோருக்கு வழங்கப்படுவதை அதிகாரிகள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கஜேந்திரன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story