சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் - அமைச்சர் நேரு பங்கேற்பு


சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு தினம் -  அமைச்சர் நேரு பங்கேற்பு
x

தீரன் சின்னமலையின் நினைவு தினத்தையொட்டி சங்ககிரி மலைக்கோட்டை அடிவாரம், தீரன் சின்னமலை நினைவு மண்டபத்தில் அமைச்சர் நேரு மலர் தூவியும் மரியாதை செலுத்தினர்.

சேலம்:

சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை சூழ்ச்சி காரணமாக ஆங்கிலேயர்களால் சிறைபிடிக்கப்பட்டு ஆடி 18 அன்று சங்ககிரி மலைக்கோட்டையில் தூக்கிலிடப்பட்டார்.

அவர் தூக்கிலிடப்பட்ட 217 வது நினைவு தினத்தையொட்டி இன்று காலை அரசு சார்பில் மலைக்கோட்டையின் அடிவாரத்திலும் ஈரோடு, பள்ளிபாளையம் பிரிவு சாலையில் அமைக்கப்பட்டுள்ள தீரன் சின்னமலை நினைவு மண்டபத்திலும் அமைச்சர் நேரு தலைமை வகித்து மலர் வளையம் வைத்தும் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், எம்.பி., சின்ராஜ், எம்.எல்.ஏ., ராஜேந்திரன், உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர். தீரன் சின்னமலை நினைவு தினத்தையொட்டி அரசு உள்பட பல்வேறு அரசியல் கட்சிகள் அமைப்புகள் சார்பில் மரியாதை செலுத்த உள்ள நிலையில், சங்ககிரி நகர் முழுவதும் 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


Next Story