Normal
சென்னை சாஸ்திரிபவனில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இலவச யோகா பயிற்சி
சென்னை சாஸ்திரிபவனில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இலவச யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது.
சென்னை
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு சென்னை சாஸ்திரிபவனில் 21 நாள் இலவச யோகா பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. ஊழியர்கள் மன அழுத்தம் இல்லாமல் புத்துணர்ச்சியோடு பணியாற்றும் வகையில் உணவு இடைவெளியின்போது இந்த யோகா பயிற்சி அளிக்கப்படுகிறது. தேசிய சித்த மருத்துவ நிறுவனத்தின் டாக்டர்கள் யோகா பயிற்சி அளிக்கிறார்கள்.
ஆயுஷ் அமைச்சகத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 5 நிமிட யோகா, ஆசனங்கள், பிராணாயாமம், தியானம் போன்றவை யோகா நெறிமுறை செயலி வழியாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
இந்த யோகா பயிற்சி முகாம் ஏற்பாடுகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் தேசிய சித்த மருத்துவ நிறுவனத்துடன் இணைந்து மேற்கொண்டுள்ளது.
Related Tags :
Next Story