இலவச கால்நடை மருத்துவ முகாம்


இலவச கால்நடை மருத்துவ முகாம்
x

இறைப்புவாரி பஞ்சாயத்து சுப்பிரமணியபுரத்தில் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடந்தது.

திருநெல்வேலி

இட்டமொழி:

நாங்குநேரி யூனியன் இறைப்புவாரி பஞ்சாயத்து சுப்பிரமணியபுரத்தில் தமிழக அரசின் இலவச கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது. இறைப்புவாரி பஞ்சாயத்து தலைவர் மோகனா யோசுவா தொடங்கி வைத்தார். கால்நடைத்துறை உதவி இயக்குனர் டாக்டர் தங்கராஜ் தலைமையில் கால்நடை டாக்டர்கள் கணேசன் (பரப்பாடி), கதிரவன் (இட்டமொழி) ஆகியோர் சிகிச்சை அளித்தனர். சிறந்த கால்நடைகள் வளர்ப்போருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் டி.வி.எஸ். களப்பணியாளர் ராமலட்சுமி, கால்நடை உதவியாளர் கிருஷ்ணபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story