டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு


டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு
x

கள்ளக்குறிச்சியில் நாளை நடக்கிறது டி என் பி எஸ் சி குரூப் 4 தேர்வுக்கான இலவச மாதிரி தேர்வு கலெக்டர் ஸ்ரீதர் தகவல்

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டம் வழியாக பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள், மாதிரி தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் 7,301 பணியிடங்களுக்கான (கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர்) டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இத்தேர்வு வருகிற 24-ந் தேதியன்று நடைபெறவுள்ளது. எனவே மேற்காணும் போட்டித் தேர்வுக்கு தயாராகும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த போட்டி தேர்வர்கள் பயனடையும் வகையில் இலவச மாதிரி தேர்வுகள் நாளை(ஞாயிற்றுக்கிழமை) மற்றும் வருகிற 17-ந் தேதி ஆகிய 2 நாட்கள் சேலம் மெயின் ரோடு, இந்திலியில் உள்ள ஆர்.கே.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது. கள்ளக்குறிச்சி, நேப்பால் தெருவில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலோ அல்லது http://shorturl.at/fJSZ3 என்ற உரலி வழியாகவோ(கூகுள் பார்ம்) பதிவு செய்தவர்கள் இலவச மாதிரி தேர்வுகளை எழுதி பயன்பெறலாம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story